என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துரை முருகன்"
- சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிப்பு.
- 2 மாவட்ட தி.மு.க. செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
சென்னை:
தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் துரை முருகன் கூறியிருப்பதாவது:-
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜெகதீஷனும் நியமிக்கப்படுகிறார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
- கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பெண்ணிடம் முதல்-அமைச்சர் பணம் கொடுப்பதை டிவியில் பார்த்தேன். அதை பற்றி கேட்க தேர்தல் ஆணையத்திற்கு மனம் வராது.
தேனியில் ரூ.2 ஆயிரம் கொடுத்ததை பார்த்தோம். இதுவும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எங்கள் மீது எவ்வித நேரடி குற்றசாட்டும் இல்லாமல், எங்களை எந்த விளக்கமும் கேட்காமல் அவர்களாகவே முடிவு செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட ஒரு சதி.
தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அ.தி.மு.க.வில் பணம் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என கருதுகிறேன். நடைபெறும் 38 பாராளுமன்றத்திலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #VelloreLSpolls #DuraiMurugan #KathirAnand
மு.க.ஸ்டாலினின் 66-வது பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அணைக்கட்டை அடுத்த தார்வழி கிராமத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு 30 பேருக்கு சலவைபெட்டி, 10 பேருக்கு 3 சக்கர சைக்கிள், 7 பேருக்கு இருசக்கர சைக்கிள், 75 பேருக்கு தையல் எந்திரம், 200 பேருக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் உள்பட 425 பேருக்கு மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
கருணாநிதிக்கு நிழலாக இருந்தவர் துரைமுருகன். அவர் தற்போது எங்களுக்கு கருணாநிதியின் மறுஉருவமாக இருக்கிறார்.
தி.மு.க. சார்பில் நடந்து வரும் ஊராட்சி சபை கூட்டங்களை யாரையோ பார்த்து காப்பி அடிப்பதாக சிலர் சொல்லி வருகின்றனர். ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருக்கும் போதே இது போன்ற கூட்டங்களை நடத்தினார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. சார்பில் 12,500 கிராமங்களில் ஊராட்சி சபைகூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கெல்லாம் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெறச்செய்தால் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். நந்தகுமார் எம்.எல்.ஏ.வை போன்று அனைவரும் செயல்பட்டால் கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் வெற்றிபெறலாம்.
வருகிற மே மாதம் நடைபெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களை வெற்றிபெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
துரைமுருகன் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும். அதில் தி.மு.க. 18 தொகுதிகளில் வெற்றிபெற்றால் அ.தி.மு.க. ஆட்சியை கூண்டோடு வெளியேற்றிவிடலாம். நான் 11 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன். அதேபோன்று அணைக்கட்டு தொகுதி நிரந்தர எம்.எல்.ஏ. நந்தகுமார்தான்.
அவர் தொகுதிக்கு ஆற்றும் சேவை மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்த தொகுதி நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. நந்தகுமார் வந்தபிறகு அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது. கலைஞர் ஆட்சியில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்களுக்கு ரூ.200 கூலி வழங்கப்பட்டது. தற்போது ரூ.120 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 365 நாட்களும் வேலை வழங்கப்படும். நான் அமைச்சராக இருந்தபோது 38 ஆயிரம்பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கிக்கொடுத்தேன். தற்போது பாதிபேருக்கு கூட ஓய்வூதியம் வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். #DMK #UdhayanidhiStalin #DuraiMurugan
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த சட்டமன்றம் கண்ணியம் மிக்க சபையாகும். இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் நுழைந்து விட முடியாது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் ஊழியர்கள் கூட தலையில் தொப்பி அணிந்துதான் உள்ளே வருவார்கள். சிறப்பு நேரமாக கவர்னர் வந்து செல்வார். சபாநாயகரால் அனுமதிக்கப்படும் விருந்தாளிகளும் வந்து அமரலாம். இவர்களை மீறி யாரும் உள்ளே வரமுடியாது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல தலைமை செயலாளர் கூட உள்ளே வந்து இருக்கையில் அமர முடியாது. அதையும் மீறி யார் வந்தாலும் அவர்களை கண்டிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. ஏன் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் கூட உங்களுக்கு (சபாநாயகருக்கு) உண்டு. அந்த அளவுக்கு தாங்கள் சர்வ வல்லமை படைத்தவர். எந்த கோர்ட்டும் உங்களை அழைக்க முடியாது. கட்டளையிட முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் கவர்னர் உரை நிகழ்த்திய அன்று அவருடன் வந்த செயலாளர் தங்கள் சபாநாயகர் இருக்கை அருகே இணையாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். பொதுவாக கவர்னர் வரும்போது அவருடன் வரும் செயலாளர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று தலைமை செயலாளர் அருகே அமர்வதுதான் வழக்கம்.
ஆனால் இப்போது சட்டமன்றத்தின் உள்ளேயே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த மன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் நான் இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
கவர்னரின் உதவியாளர்கள் அமர்வதை இனிவரும் காலங்களில் சரியாக எப்படி கையாள வேண்டுமோ? அதை இனி கையாளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #DuraiMurugan #Dhanapal
அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார். இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். #DMK #DuraiMurugan
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் இன்று நெல்லை வந்தனர். இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் முகம்மது அபுபக்கர் (கடையநல்லூர்), பரமசிவம் (வேடசந்தூர்), ராஜா (மன்னார்குடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் மற்றும் அதிகாரிகள் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தனர்.
பாளை வடக்கு ஐகிரவுண்டு சாலையில் உள்ள மனகாவலம்பிள்ளை பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பாக அங்கு அமைக்கப்பட்டுள்ள மட்கும் குப்பைகளை உரமாக்கும் கிட்டங்கியை குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நிலம் வழங்கியவர்களுக்கு முழு பணமும் வழங்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நீர் மேலாண்மை திட்டத்தை பொறுத்தவரை அரசு மந்தமாக செயல்பட்டு வருகிறது.
மழை காலத்தில் எந்த கால்வாயையும் பராமரிக்க முடியாது. மழைக்கு முன்பே கால்வாய்கள் பராமரிக்கப்படவேண்டும். கால்வாய்கள் தூர்வாரப்பட்டு கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்ல வகை செய்திருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து குழுவினர் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள சூழலியல் பூங்காவை பார்வையிட்டனர். தொடர்ந்து நாளையும் மாவட்டத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபடுகிறார்கள். நாளை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். #DMK #DuraiMurugan #TNGovt
தென்காசியில் நேற்றிரவு தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யக்கூடிய தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது. இதற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள். மதத்துக்கு மதம் திருமண முறை மாறுபட்டாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMK #DuraiMurugan #MKStalin
சென்னை:
தி.மு.க.தலைவர் பதவிக்கு அவசர அவசரமாக தேர்தல் நடைபெறுவதாக மு.க.அழகிரி குற்றம் சாட்டி இருந்தார்.
இதுபற்றி சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
தி.மு.க. தலைவர் தேர்தலில் அவசரம் எதுவும் கிடையாது. எங்கள் கட்சியை பொறுத்தவரை தேர்தலை முறைப்படி நடத்துகிறார்கள்.
கட்சியில் எங்கள் தலைவர் மறைவையொட்டி ஆகஸ்டு மாதத்தில் அந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிசொல்லி இருக்கிற காரணத்தினால் பொதுக்குழுவை கூட்ட வேண்டி உள்ளது. ஆகவே அந்த பொதுக்குழுவை கூட்டி தேர்தலை முறைப்படி நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்